Thursday, March 12, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13.03.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13.03.2020


*திருக்குறள்*(அதிகாரம்: *கல்லாமைகுறள் எண்: *402*)
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.

*விளக்கம்:*
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக 
இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

*பழமொழி*
எலி அழுதால் பூனை விடுமா?
“Even if rat cries, cat unrelenting.”

*சிந்தனைத் துளிகள்*
பேச்சு பெரிது தான் ஆனால் அதைவிட மெளனம் மிகப் பெரியது.

*பொன்மொழி*
நீங்கள் பெருங்கடலில் சிறுதுளி அல்லசிறுத்துளியில் முழு கடல்
-ஜலால் அத்-டின் முஹம்மத் ருமி

*SCIENCE CORNER:*
ஒரு கண்ணாடி ஜாரை மறுசுழற்சி செய்வதன் மூலம் நாம் மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்காகச் செலவிடும் எனர்ஜியை சேமிக்க முடியும்.

*
பொது அறிவு*
மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
விடை: ஆன் ட் ரோ •போபியா


*English word & meanings*
 
   obtain
*Come into possession of
He delayed making the unclassified report public while awaiting an Army review, but Rolling Stone magazine obtained the report and posted it Friday night.

*நீதிக்கதை*
                                            விலங்குகள் பேசுவது புரிந்தால்

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்ஒருசமயம்காட்டு வழியாகச் சென்றான் அவன்அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி ஒருவரைக் காப்பாற்றினான்.
மகிழ்ந்த துறவிபறவைகள்விலங்குகள் என்ன பேசினாலும் இன்றுமுதல் உனக்குக் கேட்கும்இப்படிப்பட்ட ஆற்றல் உனக்குக் கிடைத்திருக்கிறது என்ற உண்மையை யாரிடமும் சொல்லக் கூடாதுஅப்படிச் சொன்னால் தலை வெடித்து நீ இறந்து விடுவாய்போய் வாஎன்றான்.
துறவியை வணங்கிவிட்டு அரண்மனைக்குப் புறப்பட்டான் அவன்வழியில் இருந்த விலங்குகள் பறவைகள் பேசிக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டதுதற்செயலாகக் கிடைத்த விந்தையான ஆற்றலை எண்ணி மகிழ்ந்தான் அவன்.
இரவு நேரம்அவனும் அரசியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்அப்பொழுது சிறிதளவு தேனும் ஒரு உருண்டை சோறும் தவறித் தரையில் விழுந்தன.
அங்கிருந்த எறும்பு ஒன்றுஓடி வாருங்கள்கூட்டமாக ஓடி வாருங்கள்நமக்கு இனி உணவுப் பஞ்சமே இல்லைஅரண்மனை மதுக் குடம் உடைந்து தேன் வெள்ளமாகப் பாய்கிறதுபெருஞ்சோற்று மலையே நமக்காகக் கிடக்கிறதுஎன்று உரத்த குரலில் தன் கூட்டத்தை அழைத்தது.
இதைக் கேட்ட அரசன்இரண்டு சொட்டு தேன்தேன் வெள்ளமாஒரு உருண்டை சோறு பெருஞ்சோற்று மலையாஇந்த எறும்பிற்கு அறிவே இல்லையாஇப்படியா வருணிப்பதுஎன்று நினைத்தான்அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தன்னை மறந்து கலகலவென்று சிரித்தான் அவன்.
அருகிலிருந்த அரசிஏன் சிரிக்கிறீர்கள்என்று கேட்டாள்.
ஒன்றும் இல்லைஎன்று மழுப்பினான் அவன்.
சாப்பிட்டு முடித்த அரசன் பட்டு மெத்தையில் படுத்தான்அரசி வெற்றிலை பாக்கு மடித்துத் தந்து கொண்டிருந்தாள்அறையில் இனிய மணம் பரவியது.
அங்கிருந்த ஆண்  ஒன்றுபெண் ஈயை அழைத்துஎவ்வளவு இனிய சூழல் வாநாம் இருவரும் அரசனின் முதுகில் இருந்து ஓடியாடி விளையாடுவோம்மகிழ்ச்சியா இருப்போம்இதைப் போன்ற நல்வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்என்றது.
என் முதுகு இந்த ஈக்களுக்கு மெத்தையாஎன்று நினைத்தான் அரசன்அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லைமீண்டும் கலகலவென்று சிரித்தான்.
ஏன் சிரிக்கிறீர்கள்என்று கேட்டாள் அரசி.
ஒன்றும் இல்லைஎன்று வழக்கம் போல மழுப்பினான் அவன்.
உண்மையைச் சொல்லுங்கள்என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்நீங்கள் சொல்லாவிட்டால் நான் இனிமேல் உங்களுடன் பேச மாட்டேன்என் மீது உயிரையே வைத்திருப்பதாக நீங்கள் சொன்னதெல்லாம் நடிப்புஎன்று கோபத்துடன் சொன்னாள் அவள்.
என் உயிருக்கும் மேலாக நான் உன்னிடம் அன்பு வைத்திருக்கிறேன்நான் சிரித்ததற்கான காரணம் மட்டும் கேட்காதே என்றான் அவன்.
நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்என்று வற்புறுத்தினாள் அவள்.
உண்மையைச் சொன்னால் என் உயிர் போய்விடும்என்றான் அவன்.
அதெல்லாம் எனக்குத் தெரியாதுநீங்கள் சிரித்ததற்கான காரணம் எனக்குத் தெரிய வேண்டும்என்று அடம்பிடித்தாள் அவள்.
என்ன செய்தாலும் தன் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்தான் அவன்.
என் உயிரைவிட உனக்கு நான் சிரித்ததற்கான காரணம் தெரிய வேண்டும்நாளை மாலையில் உனக்கு அந்த உண்மையைச் சொல்கிறேன்அப்படியே என் பிண ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்து வைஎன்று வருத்தத்துடன் சொன்னான் அவன்.
பொழுது விடிந்ததுவழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவ வந்தான் அவன்மாலையில் இறக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் சோகமாக இருந்தான்அரண்மனை முழுவதையும் அரசன் இறக்கப் போகும் செய்தி பரவி இருந்தது.
உலாவிக் கொண்டிருந்த அவன் பின்னால் வளர்ப்பு நாய் சோகமாக வந்து கொண்டிருந்தது.
சிறிது தூரத்தில் அரண்மனைச் சேவல் பெட்டைக் கோழிகள் சூழ ஆரவாரமாக உலாவிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த நாயால் கோபத்தை அடக்க முடியவில்லைசேவலேஉனக்குச் சிறிது கூட நன்றி கிடையாதாநமக்கு இவ்வளவு காலம் உணவு அளித்துக் காப்பாற்றியவர் இந்த அரசர்இன்று மாலை இவர் இறக்கப் போகிறார்எல்லோரும் சோகமாக இருக்கின்றனர்இந்தச் சூழலில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயேஇது நியாயமாஎன்று கேட்டது.
அதற்குச் சேவல்நம் அரசர் பெரிய முட்டாள்அவருக்கு இருப்பது ஒரே ஒரு மனைவிஅவளுக்காக உயிரைவிடத் துணிந்துள்ளார்எனக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் நீயே பார்என் பேச்சைக் கேட்டுத்தான் அவர்கள் நடக்க வேண்டும்இல்லாவிட்டால் அவர்களுக்குத் தண்டனை தருவேன்மனைவிக்காக இந்த அருமையான உயிரை நான் இழக்க மாட்டேன்என்று பதில் சொன்னது.
இந்தச் சிக்கலிலிருந்து அரசர் உயிர் பிழைக்க வழி இருக்கிறதாஎன்று கேட்டது நாய்.
அரசர் மட்டும் அரசியிடம் உன்னைச் சவுக்கால் நூறு அடி அடிப்பேன்அதன் பிறகுதான் உண்மையைச் சொல்வேன் என்று சொல்லட்டும்எல்லாம் நல்லபடியாக நடக்கும்என்றது சேவல்.
நாயும் சேவலும் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் கேட்டான் அரசன்அரண்மனை திரும்பினான் அவன்.
மாலை நேரம் வந்ததுஅவன் அருகே வந்த அரசிஇப்பொழுது உண்மையைச் சொல்கிறீர்களாஎன்று கேட்டாள்.
நீ முதலில் சவுக்கால் நூறு அடி பெற வேண்டும்அதன்பிறகு நான் உண்மையைச் சொல்லிவிட்டு இறந்து விடுவேன்என்றான் அரசன்.
நான் சவுக்கடி பெற்றுக் கொள்கிறேன்எப்படியும் உண்மை தெரிந்தாக வேண்டும்என்றாள் அவன்.
அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அரசன்கையில் சவுக்கை எடுத்த அவன் அவளை ஒங்கி அடித்தான்.
பத்து அடியைக் கூட அவளால் தாங்க முடியவில்லைமென்மையான அவளுடைய உடலிலிருந்து குருதி கசியத் தொடங்கியதுஐயோபோதும் அடிப்பதை நிறுத்துங்கள்உங்கள் உண்மையும் வேண்டாம்சவுக்கடியும் வேண்டாம்என்று அலறினாள் அவள்.
சவுக்கால் அடிப்பதை நிறுத்தினான் அவன்.
அதன்பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
.

*IDIOMS AND MEANING*

At the drop of a hat
Meaning: without any hesitation; instantly.

*இன்றைய செய்திகள்*
  13.03.2020
1. கரோனா அச்சுறுத்தல்தில்லியில் பள்ளிகல்லூரிதிரையரங்குகளை மூட கேஜரிவால் உத்தரவு.
2.     உச்ச நீதிமன்ற உத்திரவின் பேரில் சிவகாசிப் பகுதியில் உள்ள          பட்டாசு ஆலைகளில் சி.பி.அதிகாரிகள் ஆண்டு
3.     நிறங்களை அறிவதில் குறைபாடு இருப்பவர்களுக்கும் இனி ஓட்டுநர்  உரிமம்.
4.      இந்தியா - தென் ஆப்பிரிக்காமுதல் ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டது

*News in English*
1
.  Covid 19: Delhi schools, colleges shut till Mar 31.

2. Sensex, Nifty log worst-e.ver fall in history.

3. 517 animals died at IIT Madras since 2010: Forest department.

4. Beijing orders quarantine for all international arrivals
.

No comments:

Post a Comment

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks