Wednesday, March 11, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12.03.2020


*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்* *12.03.2020*


*திருக்குறள்*

(அதிகாரம்: *கல்லாமை* குறள் எண்: *401*)

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

*விளக்கம்:*
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

*பழமொழி*

இடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்
If you give an inch, he will take all

*சிந்தனைத் துளிகள்*

செல்வம் பெருகப் பெருக ஆசை அதிகமாவது போல, அறிவு பெருகப் பெருக அதில் ஆர்வம் அதிகமாகும்

*பொன்மொழி*
சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.
-ஹெச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

*SCIENCE CORNER:*
ஜம்போ ஜெட் ரக விமானங்கள் பல உள்ளன. இந்த ரக விமானங்களில் உள்ள எரிபொருளின் முழு கொள்ளளவு ஒரு வாகனம் 4 முறை உலகைச் சுற்றி வரச் செலவாகும் எரிபொருளுக்கு இணையான அளவாகும்

*பொது அறிவு*

நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?

விடை: _ஆறு தசைகள்._


*English word & meanings*

*Establish*
_Set up or found_
*A small French colony, Port Louis, was established on East Falkland in 1764*.

*நீதிக்கதை*

காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.
உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.
சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது
.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,
''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.
அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

*IDIOMS AND MEANING*
*Break a leg*
_Good luck_

*இன்றைய செய்திகள்*
12.03.2020

1. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஹைகோர்டில் வழக்கு.
2.தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
3.கொரோனா வைரஸ்
நோயாளிகள் 121,747
மரணங்கள் 4,389
குணமடைந்தவர்கள் 66,988.
4.இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

*News in English*

1.More rain, snow likely in Himachal's tourist places.
2.Coronavirus: 83 evacuated from Italy, put in Army's Manesar quarantine facility.
3.Cinema halls in entire Jammu region to be shut till March 31.
4.Tamil Nadu is corona virus free, says Health Minister Vijayabaskar.

No comments:

Post a Comment

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks