WELCOME TO TAMILNADU DIGITAL TEAM
Saturday, April 27, 2019
பயன்படுத்த தூண்டும் EDUCATION APP
மாதந்தோறும் நமது ஊதியத்தில் பிடிக்கும் 10% CPS தொகை பிடித்ததிற்கான Statement எப்படி Download செய்வது. அதற்கான வீடியோ
CPS Statement எடுக்க click செய்யவும்
S.PRABUDOSS
BT, PUMS KUNNAPPATTU,
Thirupporur Union. KANCHIPURAM District.
TAMILNADU DIGITAL TEAM
Thursday, April 25, 2019
Emis Latest News
Emis ல் மாணவர்களை Promote செய்வது எப்படி, அவர்களுக்கு EMIS மூலமாக TRANSFER CERTIFICATE GENERATE
செயவது எப்படி என காணொளி கீழே link கோடுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன் பெறவும்.
Click k to see 👆👆👆
Tuesday, April 23, 2019
ஏப்ரல் 23 - உலக புத்தக தினம் இன்று (23.04.2019)
ஏப்ரல் 23 - உலக புத்தக தினம் இன்று (23.04.2019)
1.கல்லான் விலங்காய்க் கழிதல் போல் நல்லநூல்
இல்லாத வீடும் இழிவு. ( அரும் பொருளமுதம்)
2.புத்தகம் உள்ளதே புத்தகம்; இல்லையேல்
பித்தகம் ஆகும் பிறழ்ந்து.
3.புத்தகம் படிகமாலை குண்டிகை ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலை (கம்பர்)
4.நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு (அவ்வையார்)
5. நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு. (குறள்)
6.புஸ்தகம் அஸ்த பூஷணம் (வடமொழி பழமொழி)
7.வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது நூல் ஆகும். (தொல்காப்பியம்)
8.பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா – எஞ்சாத
கையேவாய் ஆகக் கதிரே மதியாக
மையிலா நூல்முடியுமாறு. (நன்னூல்)
9.ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் (புறநானூறு – ஆவூர் மூலங்கிழார்)
10. நுணங்கு நுண் பனுவல் புலவன் (அகநானூறு – குடவாயிற்கீரத்தனார்)
11.பயன் தெறி பனுவல் பைதிர் பாண (நற்றினை)
12.திறம் வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது (கலித்தொகை)
13.நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர்க் காப்பாளர் (மதுரைக் காஞ்சி – மாங்குடி மருதனார்)
தினம் ஒரு திருத்தலம்
திருப்புனவாயில்
புராண பெயர் :
புன்னை வனம்
மூலவர்:
விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)
உற்சவர்:
பழம்பதிநாதர்
தாயார்:
பெரியநாயகி
தல விருட்சம்:
புன்னை, சதுரக்கள்ளி, மகிழம், குருந்த மரம்
தீர்த்தம்:
லட்சுமி, பிரம தீர்த்தம்
ஆகமம்:
சிவாகமம்
பாடல் வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
தலவரலாறு
சதுரகள்ளி வனமாக இருந்த இப்பகுதியில் கார்கவ முனிவர் தவம் செய்து வந்தார். அசுரன் ஒருவன் புலிரூபம் எடுத்து இவரைக் கொல்ல முயன்றான்.
கோபமடைந்த முனிவர் அவனை எப்போதும் புலியாகவே இருக்கும்படி சபித்தார்.
ஒருமுறை பார்வதி மானிட வடிவில் இப்பகுதிக்கு வரும்போது, புலிவடிவில் இருந்த அரக்கன் பார்வதி மீது பாய்ந்தான்.
கோபமடைந்த அம்பாள், காளியாக மாறி புலியை எட்டி உதைத்தாள். தாயின் திருவடி பட்டதோ இல்லையோ அவன் சுயரூபம் பெற்றான். அவனது அசுரகுணங்களும் ஒழிந்து விட்டன.
அன்னையே! நான் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரம் தர வேண்டும்,''என்றான். அதன்படி அசுரன் இத்தலத்தில் பெரியநாயகி அம்மனின் எதிரே நந்தி வடிவில் அமர்ந்து விட்டான். எனவே இத்தலத்து நந்தி "வியாக்ர நந்தி' எனப்படுகிறது
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் சிறை பட்ட பிரம்மா சிவனால் விடுவிக்கப்பட்டார்.தவறு செய்த பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலைப் பெற முடிவு செய்து இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி,சிவலிங்கத்தின் நான்கு பக்கமும் சிவமுகத்தை உருவாக்கி,சிவலிங்க அபிசேகத்திற்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி வழிபட்டார் என்பது நம்பிக்கை.
ஆலய அமைப்பு
கிழக்கு முகமாக திகழும்
ஐந்துநிலை ராஜகோபுரம் இதன் உயரம் 65 அடி ஆகும். இங்கே வல்லப கணபதியும், தண்டபாணி ஸ்வாமியும் சிறந்து விளங்குகின்றனர். உள்ளே, நேராக கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமான். அடுத்ததாக சபா மண்டபம், மாக மண்டபம், இடைமண்டபம், கருவறை என நீண்ட கருங்கல் மண்டப வரிசை ஒரே பெரிய பிராகாரத்தைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தின் தென் மூலையில் சோமாஸ்கந்தர் வீற்றிருக்கும் அறை. வடப்புறம் தென் முகமாக வீற்றருளும் நடராஜர்-சிவகாமி. உடன் ஏனைய உற்சவர் சிலா விக்ரகங்களும் உள்ளன. அதனெதிரே நால்வரும் உடன் சேக்கிழாரும் கற்சிற்பமாக உள்ளனர். மகாமண்டபத்தின் வலப்புறம் சிறுவாயில் உள்ளது. அடுத்துள்ள இடை மண்டபம் விசாலமானது. இடை மண்டபத்தில் நுழையும்போதே ஈசனின் பிரமாண்டத் திருமேனி நம்மை பிரமிக்க வைக்கிறது.
அதியற்புதமான சிவ தரிசனம் முடித்து, வலம் வருகையில், தென் கிழக்கில் மதிலொட்டி மடப்பள்ளியும், அருகே தல விருட்சமான புன்னை மரமும் அமைந்துள்ளன. தென்புறமாக கொட்டகையின் கீழ் கபில புத்திரர்கள் ஒன்பது பேருடன் ஆதிசைவ சிவனடியார்கள் இருவரும் வீற்றுள்ளனர். அருகே சதுர்முக லிங்கமும், பஞ்ச கணபதிகளும் உள்ளனர். மேலே மகிழமரம் நிழலோடு, நறுமணத்தையும் பரப்புகிறது.
அடுத்ததாக அம்பாள் சந்நதி. இந்தச் சந்நதிக்கு முன்னால் வாயில் உண்டு. அதன் கதவுகள் குடைவரைக் காளியின் பொருட்டு, எப்போதும் மூடியே இருக்கும். நந்தி இங்கு வாகனமாய் உள்ளது. வெளிப்புற மண்டபம் பல தூண்களை கொண்டுள்ளது! கருவறையுள் கருணாகடாட்சியாய் அருட்கருணைப் புரிகின்றாள், ஸ்ரீ பரங்கருணை நாயகி! புன்னகை சிந்தியபடி பொலிவுறத் திகழும் இந்த அன்னையை பெரியநாயகி என்றும், பிரஹன்நாயகி என்றும் அழைப்பார்கள். ‘‘கச்சனிமுலையம்மை’’ என கல்வெட்டில் இவளது திருநாமம் பொறிக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள்
மிகப்பெரிய ஆவுடையார் சுற்றளவு 82.5 அடி
தல விருட்சம் 4
இத்தலத்தை தரிசித்தால் பாண்டிய நாட்டு தலங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.
அமைவிடம்
அறந்தாங்கி, ஆவுடையார்கோயில்திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
ஆலய முகவரி
விருத்தபுரீசுவரர் திருக்கோயில்
திருப்புனவாசல்
ஆவுடையார் கோயில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் 614629
இவ்வாலயம் தினமும் காலை 6.00 மணி முதல் 11.30 வரையிலும் மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்
Monday, April 22, 2019
நூல் வெளியீட்டு விழா
முனைவர் மணி. கணேசனின்
புதிய வசந்தத்தை நோக்கி...
என்னும் நூல் நாளை 23.04.2019 அன்று கரூரில் கோலகலமாகக் கொண்டாடப்படும் உலகப் புத்தக நாள் விழாவில் வெளியிடப்பட உள்ளது . இந்த நூல் கல்வி மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஆகும் . ஜனசக்தி, தினமணி மற்றும் இந்து தமிழ் நாளேடுகளில் பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் நூலாக தொகுக்கபட்டுள்ளது . இந்த நூல் வெளியீட்டு விழாவை சக்ஸஸ் பதிப்பகமும் கரூர் குரலும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது .
Sunday, April 21, 2019
QR Code Read Using with Webcam
QR Code read used with Webcam Tutorial Click
ஏப்ரல் 21 நிழலில்லா தினம்
நிழலில்லா தினம்(Zero Shadow Day) என்றால் என்ன?
தினமும் காலையிலும் மாலையிலும் பொருட்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும். சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும்.
ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது அந்த நாளையே ‘நிழலில்லா நாள்' என்கிறோம்.
இந்த வானியல் நிகழ்வு ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும் (ஏப்ரல் 21 மற்றும் ஆகஸ்ட் 21 2018)
அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் இது நிகழ்வதில்லை அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் இது நிகழும். சூரியனின் வட நகர்வு நாள்களில் ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும், என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். மேலும் பகல் 12 மணிக்குத்தான் நிழல் பூஜ்ஜியமாகும்.
நன்றி
ஜாகிர் உசேன்
Saturday, April 20, 2019
NMMS RESULT
NMMS RESULT ALL DISTIRICTS PDF
CLICK LINK
https://drive.google.com/file/d/1XXjgdJ0te-qaVVzwjlJCaDutodT4nkat/view?usp=sharing
Wednesday, April 10, 2019
பழங்கால பொருட்களின் வயதை எப்படி கண்டுபிடிக்கின்றனர்? அறிவியல் அறிவோம்..
கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தாள்.
அந்த குடியிருப்பு உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுநகரத்தில் உள்ள குடியிருப்பு.
அனைவரும் மிட்டாய் எடுத்துக் கொண்டு
“ உனக்கு பிறந்தநாளா” என்று கேட்டார்கள்.
“இல்லை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் சோதித்ததில் தமிழர் நாகரீகம் 3000 ம் ஆண்டு பழமையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது ” என்றாள்.
இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லியின் அம்மா உனக்கு இது தேவையில்லாத வேலை” என்று எச்சரித்தார்.
“அம்மா நாம் யாரையாவது எந்த கலாச்சாரத்தையாவது குறை சொன்னோமா. நம் கலாச்சாரத்துக்கு ஒரு அறிவியல் அடிப்படை ஆதாரம் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் அவ்வளவுதானே” என்று பதில் சொல்லிவிட்டாள்.
இப்படி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து வரும் போது அவளுக்கு பிடித்த ரிச்சா ஆண்டிக்கும் மிட்டாய் கொடுத்தாள்.
ரிச்சா ஆண்டி செய்தியைக் கேட்டு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தெரிவித்து விட்டு கனகவல்லியிடம்
“சரிப்பா Carbon dating carbon dating என்று சொன்னாயே கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன? “
“சத்தியமா எனக்கு தெரியாது ரிச்சா ஆண்டி”
“அது தெரிஞ்சிருக்கனும்ல. சரி கார்பன்னா என்ன”
“கார்பன்னா அது ஒரு தனிமம். கரி.நம்ம உடம்புல நிறைய கார்பன் இருக்கு”
“சரி கார்பன் அணுக்குள்ள எத்தனை புரோட்டான் எத்தனை எலக்ட்ரான் இருக்கு, எத்தனை நியூட்ட்ரான் இருக்கும்”
“கார்பன் அணுவுல 12 புரோட்டான், 12 நியூட்ரான், 12 எலட்ரான் இருக்கும்”
“ம்ம்ம் சரியாக சொன்னாய். நீ சொல்ற கார்பனை Carbon 12 அப்படி சொல்லுவாங்க”
“அது தெரியும் ரிச்சா ஆண்டி”
அதே மாதிரி கார்பன் 14 அப்படின்னு ஒரு தனிமம் இருக்கு”
“ Carbon 14 ஆ”
“ஆமா. Carbon 14 ல, ரெண்டு நியூட்ரான் அதிகமா இருக்கும். அங்க 12 நியூட்ட்ரானுக்கு பதிலா 14 நியூட்ரான் இருக்கும்”
“அப்படியா”
“ஆமா கனகவல்லி Carbon 14 கதிர்களை வெளியிடும். அதாவது Radio active rays வெளியிடும்”
“ஒஹோ”
“இப்ப என் உடம்புல எவ்வளவு Carbon 12 இருக்கோ அதே அளவுதான் Carbon 14 ம் இருக்கும். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் வெளியாகுற Carbon 14 ன என் உடம்பு வெளிய இருந்து எடுத்துக்கும்”
“அப்போ உயிரோட இருக்கிறவரைக்கும் நம்ம உடம்புல Carbon 12 ம் , Carbon 14 ம் சம அளவுல இருக்கும்”
“ஆமா கனகவல்லி. சமமா இருக்கும். மனிதனோட உயிர் போனதுக்கு பிறகு Carbon 14 கதிரா வெளியே போக ஆரம்பிக்கும்”
“ம்ம்ம்”
“ஒரு கிராம் கார்பன் 14 கதிரா வெளியேறி அரை கிராம் கார்பன் 14 ஆகறதுக்கு தோராயமா 5600 வருடங்கள் எடுத்துக்கும்”
“5600 வருடங்களா ரிச்சா ஆண்டி”
“ஆமா அதோட எடைல பாதி ஆகுறதுக்கு Carbon 14 வந்து 5000 years எடுத்துக்கும். இத Half life period ன்னு சொல்லுவாங்க”
“ஒஹோ”
“இப்ப ஒரு பழமையான பொருளோட வயதை கண்டுபிடிக்க அதுல ஒரு பகுதி எடுத்துப்பாங்க. அதுல இருக்கிற Carbon 12 அளவ கணக்கிடுவாங்க. அது 100 சதவிகிதம்னு எடுத்துப்பாங்க. அப்புறம் அதுல Carbon 14 எவ்வளவுன்னு கணக்கிடுவாங்க. Carbon 12 இருக்கிற அளவுல Carbon 14 எவ்வளவு இருக்குன்னு பாப்பாங்க”
“அத வைச்சி Carbon 14 சதவிகிதம் கணக்கிடுவாங்க அப்படித்தானே”
“சரியா சொன்ன கனகவல்லி இப்போ Carbon 14 பாதி அளவுதான் இருக்குதுன்னா அது 50% இருக்குன்னு அர்த்தம்”
“ஒஹோ”
”Carbon 14 100% to 50 % ஆக எவ்ளோ வருசம் எடுத்துக்கும்”
“5600 வருடங்கள்”
“அப்போ அந்த பொருளோட வயது 5600 வருடங்கள்”
“சரி ரிச்சா ஆண்டி ஒருவேளை Carbon 14 வந்து 25 % இருந்தா.”
“ 100 டு 50 அக 5600 வருடங்கள். 50 டூ 25 ஆக 5600 வருடங்கள் மொத்தமா”
“5600 + 5600 = 11200 வருடங்கள் ரிச்சா ஆண்டி”
”இதை அடிப்படையா வைச்சி அதுக்கு ஃபார்முலா இருக்கு. அத வைச்சி வயசு கண்டுபிடிப்பாங்க. இதுதான் Carbon dating சரியா
”
“ரொம்ப தேங்ஸ் ரிச்சா ஆண்டி”
“எப்பவுமே தமிழ் மொழி, தமிழ் அப்படின்னு கொண்டாடினா மட்டும் போதாது. எந்த முறைல தமிழ் பழமைன்னு தெரிஞ்சி வைச்சிருக்கனும். அதுதான் முக்கியம் சரியா.இந்தியா மாதிரி நாட்டுல மொழி அடிப்படைவாத நோக்கத்துல இந்தி ஆதிக்கம் செலுத்த காத்திட்டு இருக்கும் வடமாநில அரசியல்வாதிகள் இருக்கிற நாட்டுல அந்த அந்த மாநில மக்கள் அவுங்க அவுங்க மொழியை காப்பாத்துறதுக்கு அறிவியல்பூர்வமா விழிப்பா இருக்கனும் சரியா.”
“சரி ரிச்சா ஆண்டி”
“சரி தமிழுக்கு ரிச்சா ஆண்டியோட மனப்பூர்வமான வாழ்த்துக்கள் போய் எல்லாருக்கும் சாக்லேட் கொடும்மா”
கனகவல்லி மிட்டாயை எடுத்துக் கொண்டு ஒடினாள்.
Tamilnadu digital team zoom class Rps
Our digiteam zoom class RPs.. We warmly thank you to all.. ...
Popular Posts
-
தேர்வு நிலை, சிறப்பு நிலை படிவம் புதியது
-
தலைமை ஆசிரியர்கள் மூன்றாம் பருவ இறுதியில் வட்டார கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்களின் தொகுப்பு. click here by TAMIL...










