Tuesday, April 23, 2019

தினம் ஒரு திருத்தலம்

தினம் ஒரு திருத்தலம்

திருப்புனவாயில்

புராண பெயர் :
புன்னை வனம்
மூலவர்:
விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)
உற்சவர்:
பழம்பதிநாதர்
தாயார்:
பெரியநாயகி
தல விருட்சம்:
புன்னை, சதுரக்கள்ளி, மகிழம், குருந்த மரம்
தீர்த்தம்:
லட்சுமி, பிரம தீர்த்தம்
ஆகமம்:
சிவாகமம்
பாடல் வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தலவரலாறு

சதுரகள்ளி வனமாக இருந்த இப்பகுதியில் கார்கவ முனிவர் தவம் செய்து வந்தார். அசுரன் ஒருவன் புலிரூபம் எடுத்து இவரைக் கொல்ல முயன்றான்.

கோபமடைந்த முனிவர் அவனை எப்போதும் புலியாகவே இருக்கும்படி சபித்தார். 

ஒருமுறை பார்வதி மானிட வடிவில் இப்பகுதிக்கு வரும்போது, புலிவடிவில் இருந்த அரக்கன் பார்வதி மீது பாய்ந்தான்.

கோபமடைந்த அம்பாள், காளியாக மாறி புலியை எட்டி உதைத்தாள். தாயின் திருவடி பட்டதோ இல்லையோ அவன் சுயரூபம் பெற்றான். அவனது அசுரகுணங்களும் ஒழிந்து விட்டன.
அன்னையே! நான் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரம் தர வேண்டும்,''என்றான். அதன்படி அசுரன் இத்தலத்தில் பெரியநாயகி அம்மனின் எதிரே நந்தி வடிவில் அமர்ந்து விட்டான். எனவே இத்தலத்து நந்தி "வியாக்ர நந்தி' எனப்படுகிறது

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் சிறை பட்ட பிரம்மா சிவனால் விடுவிக்கப்பட்டார்.தவறு செய்த பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலைப் பெற முடிவு செய்து இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி,சிவலிங்கத்தின் நான்கு பக்கமும் சிவமுகத்தை உருவாக்கி,சிவலிங்க அபிசேகத்திற்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி வழிபட்டார் என்பது நம்பிக்கை.

ஆலய அமைப்பு

கிழக்கு முகமாக திகழும்
ஐந்துநிலை ராஜகோபுரம்  இதன் உயரம் 65 அடி ஆகும். இங்கே வல்லப கணபதியும், தண்டபாணி ஸ்வாமியும் சிறந்து விளங்குகின்றனர். உள்ளே, நேராக கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமான். அடுத்ததாக சபா மண்டபம், மாக மண்டபம், இடைமண்டபம், கருவறை என நீண்ட கருங்கல் மண்டப வரிசை ஒரே பெரிய பிராகாரத்தைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தின் தென் மூலையில் சோமாஸ்கந்தர் வீற்றிருக்கும் அறை. வடப்புறம் தென் முகமாக வீற்றருளும் நடராஜர்-சிவகாமி. உடன் ஏனைய உற்சவர் சிலா விக்ரகங்களும் உள்ளன. அதனெதிரே நால்வரும் உடன் சேக்கிழாரும் கற்சிற்பமாக உள்ளனர். மகாமண்டபத்தின் வலப்புறம் சிறுவாயில் உள்ளது. அடுத்துள்ள இடை மண்டபம் விசாலமானது. இடை மண்டபத்தில் நுழையும்போதே ஈசனின் பிரமாண்டத் திருமேனி நம்மை பிரமிக்க வைக்கிறது.
அதியற்புதமான சிவ தரிசனம் முடித்து, வலம் வருகையில், தென் கிழக்கில் மதிலொட்டி மடப்பள்ளியும், அருகே தல விருட்சமான புன்னை மரமும் அமைந்துள்ளன. தென்புறமாக கொட்டகையின் கீழ் கபில புத்திரர்கள் ஒன்பது பேருடன் ஆதிசைவ சிவனடியார்கள் இருவரும் வீற்றுள்ளனர். அருகே சதுர்முக லிங்கமும், பஞ்ச கணபதிகளும் உள்ளனர். மேலே மகிழமரம் நிழலோடு, நறுமணத்தையும் பரப்புகிறது.
அடுத்ததாக அம்பாள் சந்நதி. இந்தச் சந்நதிக்கு முன்னால் வாயில் உண்டு. அதன் கதவுகள் குடைவரைக் காளியின் பொருட்டு, எப்போதும் மூடியே இருக்கும். நந்தி இங்கு வாகனமாய் உள்ளது. வெளிப்புற மண்டபம் பல தூண்களை கொண்டுள்ளது! கருவறையுள் கருணாகடாட்சியாய் அருட்கருணைப் புரிகின்றாள், ஸ்ரீ பரங்கருணை நாயகி! புன்னகை சிந்தியபடி பொலிவுறத் திகழும் இந்த அன்னையை பெரியநாயகி என்றும், பிரஹன்நாயகி என்றும் அழைப்பார்கள். ‘‘கச்சனிமுலையம்மை’’ என கல்வெட்டில் இவளது திருநாமம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

மிகப்பெரிய ஆவுடையார் சுற்றளவு 82.5 அடி
தல விருட்சம் 4
இத்தலத்தை தரிசித்தால் பாண்டிய நாட்டு தலங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.

அமைவிடம்

அறந்தாங்கி, ஆவுடையார்கோயில்திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.





ஆலய முகவரி

 விருத்தபுரீசுவரர் திருக்கோயில்
திருப்புனவாசல்
ஆவுடையார் கோயில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் 614629

இவ்வாலயம் தினமும் காலை 6.00 மணி முதல் 11.30 வரையிலும் மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்

No comments:

Post a Comment

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks