பள்ளி
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11.03.20
திருக்குறள்
(அதிகாரம்: கல்வி குறள் எண்: 399)
திருக்குறள்
(அதிகாரம்: கல்வி குறள் எண்: 399)
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
காமுறுவர் கற்றறிந் தார்
விளக்கம்:
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும்
இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும்
(அக் கல்வியையே) விரும்புவர்.
பழமொழி
அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்
அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்
The fox knows much, but more, he
that catcher him
சிந்தனைத் துளிகள்
மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது
எளிது. ஆனால் நமது தவறை உணர்வது கடினம்
பொன்மொழி
பொன்மொழி
வெகுமக்ககளின்
சிந்தனையற்ற ஒப்புதலை விட, ஒற்றை அறிவார்ந்த
மனிதரின் கடுமையான விமர்சனத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.
-ஜோகன்னஸ் கெப்லர்
science corner:
சர்வதேச
விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து, சாதனை புரிந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வில்சன் பூமிக்கு திரும்பியுள்ளார்.
பொது அறிவு
ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
விடை: பாலைவனம்
English words & meanings
issue
- some situation or event that is thought about
- As a result, the privacy issues surrounding mobile computing are becoming ever-more complex.
நீதிக்கதை
கை மேல் பலன் கிடைத்தது !
கை மேல் பலன் கிடைத்தது !
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை
சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள்
இப்படித்தான் 'அரசே, அதிகாலை
எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன்
சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத்
தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதன் பின்
தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள்
அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக்
கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று
மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன்
மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக்
கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு
காக்காய் 'வாக்கிங்'
போய் விட்டது.
மன்னனுக்கு
மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி
கொடு' என்று
உத்தரவிட்டான்.
சேவகன்
சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண்
வருங்கால் நகுக' என்று
படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும்
அதிகமானது. 'நீ
சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.
சேவகன்
சொன்னான். 'மகா மன்னரே.
இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல்
பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.
மன்னருக்கு
சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார்
என்று கேள்வி!!!
IDIOMS
AND MEANING
Better late
than never
Better to arrive late than not to come at all
Better to arrive late than not to come at all
இன்றைய செய்திகள் 11.03.20
1. கொரோனாவை வீழ்த்தும் சீனா..! நோயை கண்டு பயப்பட தேவையில்லை...
2. தமிழ்நாட்டு மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டறிய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
3. நாங்குநேரியில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் தேதி எப்போது என்பதை மேடையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்..
4. தமிழ்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வந்த அரசு மருத்துவர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தை திரும்பப்பெற்றுள்ளனர்
5. கொரோனா: இத்தாலியில் விளையாட்டு போட்டிகளுக்குத் தடை!
NEWS IN ENGLISH
1. Kamal
Nath-led Congress govt in MP stares at collapse as 22 MLAs resign.
2. More than 120
Indians on Corona virus-hit US cruise ship
3. Xi Jinping visits epicenter Wuhan; sign that
China believes corona virus outbreak has turned a corner
4. Lucknow government
schools students learn banking skills
5. First time this
year, hat-trick of ‘satisfactory’ air in Delhi
TN DIGITAL TEAM

Harrah's Lake Tahoe Casino & Hotel - JT Marriott
ReplyDeleteJT Marriott Lake Tahoe Casino & Hotel in 거제 출장마사지 Stateline 김제 출장마사지 offers 천안 출장마사지 luxurious hotel rooms, 부산광역 출장샵 restaurants, and amenities in the heart of Stateline. Book direct 아산 출장마사지 to save!