ஏப்ரல் 23 - உலக புத்தக தினம் இன்று (23.04.2019)
1.கல்லான் விலங்காய்க் கழிதல் போல் நல்லநூல்
இல்லாத வீடும் இழிவு. ( அரும் பொருளமுதம்)
2.புத்தகம் உள்ளதே புத்தகம்; இல்லையேல்
பித்தகம் ஆகும் பிறழ்ந்து.
3.புத்தகம் படிகமாலை குண்டிகை ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலை (கம்பர்)
4.நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு (அவ்வையார்)
5. நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு. (குறள்)
6.புஸ்தகம் அஸ்த பூஷணம் (வடமொழி பழமொழி)
7.வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது நூல் ஆகும். (தொல்காப்பியம்)
8.பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா – எஞ்சாத
கையேவாய் ஆகக் கதிரே மதியாக
மையிலா நூல்முடியுமாறு. (நன்னூல்)
9.ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் (புறநானூறு – ஆவூர் மூலங்கிழார்)
10. நுணங்கு நுண் பனுவல் புலவன் (அகநானூறு – குடவாயிற்கீரத்தனார்)
11.பயன் தெறி பனுவல் பைதிர் பாண (நற்றினை)
12.திறம் வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது (கலித்தொகை)
13.நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர்க் காப்பாளர் (மதுரைக் காஞ்சி – மாங்குடி மருதனார்)

No comments:
Post a Comment